திருக்கோவிலூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை

திருக்கோவிலூர் அருகே வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்த அந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பரமேஸ்வரி(வயது 45). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்த இவர் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

தீ வெப்பம் தாங்க முடியாமல் பரமேஸ்வரி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் பரமேஸ்வரியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com