இமாசல பிரதேசம் - கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி

இமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இமாசல் கனமழை
இமாசல் கனமழை
Published on

சிம்லா:

இமாசல பிரதேசத்தில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் மழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் 632 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதன் இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா கூறுகையில், இதுவரை மக்களில் 211 பேர் உயிரிழந்துள்ளனர். 438 விலங்குகள் பலியாகி உள்ளன. 109 வீடுகள் முழுவதும் பாதிப்படைந்துள்ளன என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com