ஐபிஎல் 2021- பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு அரைசதம் அடித்தார்.
பொறுப்புடன் ஆடிய தவான்
பொறுப்புடன் ஆடிய தவான்
Published on

துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்துள்ளது. டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னிலும், ராபின் உத்தப்பா 19 ரன்களும், மொயீன் அலி 5 ரன்களும் எடுத்தனர். எம்.எஸ். டோனி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு அரை சதமடித்தார். அவர் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஷிகர் தவான் தவிர மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதியில், டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட்மயர் 28 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com