

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பிராக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாகீரதியம்மா. 107 வயதான இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 105-வது வயதில் கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய 4-ம் வகுப்பு தேர்வை எழுதினார்.
அவர் அந்த தேர்வில் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். உலகிலேயே 105 வயதில் இந்த தேர்வை எழுதியவர் என்ற சாதனையை மூதாட்டி பாகீரதியம்மா படைத்தார். இதனால் அவருக்கு மத்திய அரசின் ‘நாரிசக்தி விருது’ வழங்கப்பட்டது.
கொல்லம் பிராக்குளத்தில் 1914-ம் ஆண்டு பிறந்த மூதாட்டி பாகீரதியம்மா தனது 9-வது வயதிலேயே பள்ளி படிப்பை கைவிட்டார். அதன் பிறகு அவரால் படிப்பை தொடர முடியவில்லை. இந்நிலையில் தான், தனது 105-வது வயதில் 4-ம் வகுப்பு தகுதிதேர்வில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய மருந்து நிறுவனம் பரிந்துரை