ஆனைமலையில் 4½ டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் கைது

ஆனைமலையில் நள்ளிரவில் 4½ டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் பகுதியில் நேற்று இரவு 2.30 மணிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேலுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் மற்ற போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது டெம்போவில் சிலர் ரேசன் அரிசியை கடத்த முயன்றதை கையும், களவுமாக பிடித்தார். 

ரேசன் அரிசியை கடத்த முயன்ற 3 வாலிபர்கள் மற்றும் டெம்போ, 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் ரேசன் அரிசியை கடத்த முயன்ற வர்கள் ஆனைமலையை சேர்ந்த பகிபுல்லா (வயது 44). இவர் கோவை உக்கடம் அரசு பஸ் டெப்போவில் கண்டக்டராக உள்ளார்.

மற்றொருவர் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரை சேர்ந்த முகமது ரபீக் (29). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். 3-வது நபர் ஆனைமலை காந்நி நகரை சேர்ந்த ரபீக் (39). பெயிண்டர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து 4½ டன் ரேசன் அரிசி மற்றும் 1 டெம்போ, 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி கடத்த முயன்ற கண்டக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com