மது, புகையிலை பொருட்கள் விற்ற 90 பேர் கைது

தர்மபுரி அருகே மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 90 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com