ஆப்கானிஸ்தான்: சோதனைச் சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 11 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: சோதனைச் சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 11 போலீசார் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை இம்மாகாணத்துக்குட்பட்ட சோதனைச் சாவடிகளின் மீது கும்பலாக வந்த தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு காவலுக்கு நின்ற போலீசாரும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தனர்.

இருதரப்பினருக்கும் இடையிலான சண்டையில் 11 போலீசார் உயிரிழந்ததாகவும், தீவிரவாதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் தப்பியோடி விட்டதாகவும் மாகாண கவர்னர் ஒமர் சுவாக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com