

சேலம்:
தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் நங்கவள்ளி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெற்று வரும் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 20 மற்றும் 21, 22 ஆகிய வார்டுகளிலும், 25-வது வார்டில் ஒரு பகுதியிலும் மற்றும் கொண்டலாம் பட்டிக்கு உட்பட்ட 50, 51, 52-வது வார்டு பகுதிகளிலும் நாளை (23-ந்தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.