மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பதை வெளிக்காட்டும் பட்ஜெட் - ஸ்டாலின்

தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். #TNBudget #mkstalin #Budget
மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பதை வெளிக்காட்டும் பட்ஜெட் - ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏழு பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும். 

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நிதி மேலாண்மை மோசமான நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TNBudget #mkstalin #Budget #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com