ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை(14-ந்தேதிவியாழக்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Published on

திருச்சி:

திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு 1, 2, 3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆள வந்தார் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (14-ந்தேதி வியாழக்கிழமை) ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம் அரியமங்கலம்,

கோட்டத்திற்குட்பட்ட விறகு பேட்டை, மகாலெட்சுமி நகர், மலைக்கோவில், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரெயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலி யாண்டபுரம், பொன்மலைக்கோட்டத்திற்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தா நகர், ஜெ.கே. நகர், மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையம் பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.கே.நகர், தென்றல் நகர்,

ஆனந்த் நகர், சத்தியவாணி முத்துநகர், ஐயப்பநகர், கோ. அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் பகுதி, எடமலைப் பட்டி புதூர், கே. சாத்தனூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 15-ந்தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com