தனிப்பட்ட அவசர நிலை: லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து வெளியேறினார் ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனிப்பட்ட அவசரநிலை காரணமாக லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார்.
அப்ரிடி
அப்ரிடி
Published on

லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது வருகிறது. இந்தத் தொடர் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதன்முறையாக நடக்கும் இந்த லீக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இடம் பிடித்திருந்தார். ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

விமானத்தை தவற விட்டதால் தொடக்க போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் விமானம் பிடித்து இலங்கை சென்றார்.

இந்த நிலையில் தற்போது தனிப்பட்ட அவசரநிலை காரணமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். இவர் காலே கிலாடியேட்டர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இதுவரை மூன்று போட்டிகளில் காலே அணி விளையாடியுள்ளது. மூன்றிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com