இந்த நோயுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மீன் பிரசாதம் -ருசிகர தகவல்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு ஆஸ்துமா நோயுடன் வரும் பக்தர்களுக்கு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இது குறித்த ருசிகர தகவல்களை பார்ப்போம்.
இந்த நோயுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மீன் பிரசாதம் -ருசிகர தகவல்
Published on

நாட்டில் பல்வேறு மக்களையும் பெரும்பாலும் தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. இதற்கு மீன் சிறந்த உணவாகும். ஆனால், இந்த மீன், ஒரு  கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாகதான் உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் சுவாச பிரச்சனைகளோடு வரும் பக்தர்களுக்கு மீன்களை பிரசாதமாக வழங்குகிறது. இந்த நடைமுறை 174 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

தங்கள் குடும்பத்தினர் மட்டுமே அறிந்த இந்த  ரகசியத்தை, மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுடன் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் மீன் பிரசாதமாக வழங்கப்படுகிறது என அக்கோவிலின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும் எவ்வித மத பேதமும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த முகாமில் கலந்துக் கொள்கின்றனர் எனவும், இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மீன் சிகிச்சைப்பெற்று பயன்பெற உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com