திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் மணல் கடத்தல்- 8 பேர் கைது

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் மணல் கடத்தல்- 8 பேர் கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூவம் ஆற்றுப்பகுதியில் கடம்பத்தூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏகாட்டூரை சேர்ந்த ரஜனிகுமார், சக்திவேல், ஏழுமலை, சுதா உள்ளிட்ட 8 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரிந்தது. அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து அனுமதியின்றி சவுடுமண் அள்ளுவதாக வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் சவுடு மண் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் மற்றும் லாரியை எடுத்துக் கொண்டு டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். சவுடுமண் அள்ளிய பொக்லைன் எந்திரத்தை போலீசார் சுற்றிவளைத்து பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர் சித்துக்காடு பகுதியை சேர்ந்த கோபியை கைது செய்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com