சேலத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சேலத்தில் வருகிற 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
சேலத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் மேட்டூர் தொட்டில்பட்டியில் வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளாதாலும், 15-ந் தேதி தனிக் குடிநீர் திட்டத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com