சேலம் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இன்று காலை சிறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்
Published on

சேலம்:

சேலம் மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் அடிக்கடி கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஜெயிலில் உள்ள 9-வது பிளாக்கில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறை அதிகாரிகள் 9-வது பிளாக்கில் உள்ள ஒரு அறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது விலை உயர்ந்த செல்போன் ஒன்று அங்கிருந்து கண்டெக்கப்பட்டது. இந்த செல்போனை பயன்படுத்திய கைதி யார்? என அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்களை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com