

மாஸ்கோ:
ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்க்ரிபால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது பிரிட்டன் அரசு குற்றம்சாட்டி வருகின்றது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த யூலியா ஸ்க்ரிபாலை விஷ ரசாயனம் மூலம் கொல்ல முயற்சி செய்த சம்பவத்தில் ரஷியா இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.
அதிபர் விளாடிமிர் புதினுடன் மட்டும் ரகசிய தகவல்களை பரிமாறும் இந்த உயர்மட்ட குழு இந்த விசாரணை தொடங்கிவிட்ட தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. #tamilnews #Skripaldaughter #putin #russia