அருணாச்சலப்பிரதேசம்: நிலச்சரிவில் பலியான குடும்பத்தினருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சந்திப்பு

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சந்தித்து ஆறுதல் கூறியதுடன், 10 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.
அருணாச்சலப்பிரதேசம்: நிலச்சரிவில் பலியான குடும்பத்தினருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சந்திப்பு
Published on

அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 11ம் தேதி லாப்டப் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்தார். அவர் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், நிலச்சரிவில் துண்டிக்கப்பட்ட கிராமத்தின் சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com