சிங்கப்பூர் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு

மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தார். #RahulGandhi
சிங்கப்பூர் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு
Published on

சிங்கப்பூர்:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் வாழ் இந்திய நலச்சங்கத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடையிலான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசினர். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மலிந்த்தியோரா, சாம் பிட்ரோடா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், ராகுல் காந்தி சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகநாதனையும் சந்தித்து பேசினார்.

சிங்கப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் நினைவிடம் சென்ற ராகுல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களையும் சந்தித்தார். ராகுல் காந்தி சிங்கப்பூர் பயண புகைப்படங்கள் அவரது பேஸ்புக் தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com