வெளிநாட்டு தொழிலாளர்கள் எளிதாக நாடு திரும்பும் படி கத்தார் அரசு சட்டதிருத்தம்

வெளிநாட்டு தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல தாங்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி தேவை இல்லை என்ற சட்ட திருத்தத்தை கத்தார் அரசு கொண்டு வந்துள்ளது. #Qatar
வெளிநாட்டு தொழிலாளர்கள் எளிதாக நாடு திரும்பும் படி கத்தார் அரசு சட்டதிருத்தம்
Published on

தோஹா:

வளைகுடா நாடான கத்தாரில் இந்தியர்கள் உள்பட அதிக அளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த காரணங்களுக்காக தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு, எளிதில் விசா அனுமதி கிடைக்காத வண்ணம் சட்டங்கள் அங்கு இருந்தது.

இதனால் கத்தாரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள், சொந்த நாடு திரும்புவது கடினமாக இருந்தது. இந்நிலையில், கத்தாரின் குடி அமர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற , அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்ற சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டில் வரும் 2022-ம் ஆண்டு நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்காக, அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com