

இந்திய காவல்துறையின் உயரிய விருதாக ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது புதுவை காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு, அவசரகால மீட்பு, மனிதாபிமான சேவைகளில் மிகுந்த அர்ப்பணிபுடன் செயல்பட்டதற்கான சான்றாக விருது வழங்கப்படும்.
இந்த விருதை புதுவை காவல்துறைக்கு வழங்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 18-ந்தேதி அல்லது 25-ந்தேதி அவர் புதுவைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக புதுவை கோரிமேடு மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழா மேடை, தரை தள பணிகள் எஸ்பி நல்லாம்கிருஷ்ணராய பாபு, இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேடை, அலங்காரபணிகளை மேற்கொள்ள எஸ்பி ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவலர்களும் காலை, மாலை நேரங்களில் தீவிர அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.