பிச்சை கேட்டு நடைபயணம் மேற்கொண்ட வேட்பாளர் மாஸ்கோ!

ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
பிச்சை கேட்டு நடைபயணம் மேற்கொண்ட வேட்பாளர் மாஸ்கோ!
Published on

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நூதன முறையிலும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி தொகுதியில் மாஸ்கோ என்பவர் வாளி சின்னத்தில் தேர்தலில் களம் காண்கிறார். சுயேட்சை வேட்பாளரான மாஸ்கோ பிச்சை கேட்டு வாக்கு சேகரித்து வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com