உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உறுதி மொழியினை வேளாண் அலுவலர் நடராஜன் வாசித்தார்.வருவாய் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
 மரக்கன்றுகள் நடும் காட்சி
 மரக்கன்றுகள் நடும் காட்சி
Published on

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் உலக சுற்றுப்புற சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுற்றுப்புற சூழலுக்கு நன்மைதரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உறுதி மொழியினை வேளாண் அலுவலர் நடராஜன் வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர், சண்முகம் மற்றும் மதகடிப்பட்டு உழவர் உதவியகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com