LPG Shortage| சிலிண்டர் தட்டுப்பாடால் முன்கூட்டியே தேர்வை முடிக்க புதுவை பல்கலை முடிவு?

ஒரு மாதத்துக்கு முன்பே தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
LPG Shortage| சிலிண்டர் தட்டுப்பாடால் முன்கூட்டியே தேர்வை முடிக்க புதுவை பல்கலை முடிவு?
Published on

புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை, தமிழ்நாடு, கேரளம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கில் படிக்கின்றனர்.

வெளிமாநிலங்களை சேர்ந்தோர் இங்குள்ள மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மே 1-ந்தேதிக்குள் அனைத்துத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன. விடுதிகளுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வழக்கமாக மே மாதம் நடக்கும் இறுதிப் பருவத் தேர்வுகளை ஏப்ரல் இறுதியில் நடத்தி முடிக்க பல்கலைக் கழகத் தரப்பு முடிவு செய்து தகவல்களைக் காரணம் தெரிவிக்காமல் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால் முன்கூட்டியே அதாவது ஒரு மாதத்துக்கு முன்பே தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com