புதுவை ஜிப்மரில் ஆயுஷ்மான் அட்டை இலவச பதிவு முகாம்: ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நடக்கிறது

தகுதியான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டை மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் இலவசமாக உடனடியாக பதிவு செய்து வழங்கப்படும்.
புதுவை ஜிப்மரில் ஆயுஷ்மான் அட்டை இலவச பதிவு முகாம்: ஆகஸ்ட் 15-ந்தேதி வரை  நடக்கிறது
Published on

புதுவை ஜிப்மரில் நோயில் இருந்து விடுதலை என்ற சிறப்பு பிரசார இயக்கம் ஆகஸ்ட் 15ந் தேதி வரை நடக்கிறது.

ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நெகி புற நோயாளிகள் பிரிவில் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சுகாதாரம் என்பது நோய்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்ல. மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை, நிதிப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சுகாதார சேவைகளை உறுதி செய்வதும் ஆகும். தகுதியான எந்தப் பயனாளியும் இந்த வாய்ப்பை இழக்கக் கூடாது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் வினோத்குமார் மற்றும் பேராசிரியர்கள், அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தகுதியான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டை மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் இலவசமாக உடனடியாக பதிவு செய்து வழங்கப்படும்.

இந்த பிரசாரம் தினமும் காலை 6.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடக்கிறது. இதற்காக ஜிப்மர் வளாகத்தில் பதிவு மையங்கள் இலவசமாக அமைக்கப்பட்டுள்ளன. தொடர்புக்கு உதவி எண்கள்: 89038 24770, 0413-2297004 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com