Puducherry Assembly Election | எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் இன்று பிரசாரம்

உப்பளம் தொகுதியில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகனும், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தியும் போட்டியிடுகின்றனர்.
Puducherry Assembly Election | எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் இன்று பிரசாரம்
Published on

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் புதுச்சேயில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. உப்பளம் தொகுதியில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகனும், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தியும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com