புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி முயற்சிப்போம்- விஜய் வாக்குறுதி

காங்கிரஸ், பாஜக கூட்டணி என தேசிய கட்சிகள் ஆட்சி செய்திருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி முயற்சிப்போம்- விஜய் வாக்குறுதி
Published on

புதுச்சேரிக்கு வரும் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

இதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

திறந்த வாகனத்தில் நின்றபடி விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

புதுச்சேரி மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வழிநெடுகிலும் சாலையோரங்களில் நின்று விஜய்க்கு மலர் தூவி வரவேற்றனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் விஜய் பேசியதாவது:-

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தை வைத்து அரசியல் செய்தார்கள்.

களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களையே புதுச்சேரியில் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். இரு கூட்டணிகளும் சிறுபான்மையினருககு எதுவும் செய்யாது.

ஏமாற்று கூட்டணிகளுக்கும், ஓட்டை உடைசல் கூட்டணிகளுக்கும் ஓட்டு போடாதீர்கள்.

தமிழக வெற்றிக் கழகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் யாருடனும் கூட்டணி இல்லை என மக்களுக்கு தெரிந்துவிட்டது.

யார் எப்போது முதுகில் குத்துவார்கள் என பயத்தோடு சுத்தினால் அந்த கூட்டணி வொர்க் அவுட் ஆகாது, வாஷ் அவுட்தான் ஆகும்.

சுஷ்மா ஸ்வராஜவ் 20 ஆண்டுகளுக்கு முன்பே புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

மாநில அந்தஸ்து தொடர்பான அறிக்கை அளித்தும் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகள் அந்தஸ்து பெறாதது ஏன்?

காங்கிரஸ், பாஜக கூட்டணி என தேசிய கட்சிகள் ஆட்சி செய்திருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை.

மகப்பேறு உதவித்தொகை ரூ.25,000 வழங்கப்படும். காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com