மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் ஆண்டு விழா

விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
கல்லூரி ஆண்டு விழாவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
கல்லூரி ஆண்டு விழாவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகாடெமிக் கார்த்திகேயன், டீன் ஆராய்ச்சி சஞ்ஜய் மற்றும் மருத்துவ கண் காணிப்பாளர் பிரகாஷ், பதிவாளர் தட்சிணா மூர்த்தி, செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத் தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் நர்மதா வரவேற்றார். செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத்தமிழ்செல்வி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

பாராட்டுரையை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் தனசேகரன் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் தலைமை விருந்தினராக ஜோதிகண் பராமரிப்பு மையத்தின் நிறுவனர் வனஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com