நவராத்திரி விழா: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியதை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழா: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து
Published on

புதுடெல்லி:

அம்மனுக்கு உகந்த பண்டிகையான நவராத்திரி விழா இன்று தொடங்கி அடுத்த 9 தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்ளில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறுகையில், அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். விழாவின் முதல் நாளில் தேவியை நாம் வணங்குவோம் என தெரிவித்துள்ளார். மேலும், தேவியின் பெருமைகளை போற்றும் தோத்திர பாடலின் இணையதள முகவரியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com