கள்ளச் சாராயம் தடுப்பு வேட்டையின் போது போலீசார் வயிற்றில் உதைத்ததால் கர்ப்பிணி பெண் பலி

உத்தரப்பிரேதேசம் மாநிலத்தில் கள்ளச் சாராயம் தடுப்பு வேட்டையில் ஈடுபட்ட போலீசார் வயிற்றில் உதைத்ததால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச் சாராயம் தடுப்பு வேட்டையின்  போது போலீசார் வயிற்றில் உதைத்ததால் கர்ப்பிணி பெண் பலி
Published on

உத்தரப்பிரேதேசம் மாநிலம் பாராபாங்கி மாவட்டத்தில் உள்ள மான்பூர் மாகோயா கிராமத்தினர் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் கிராமத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு வேட்டையில்  ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பல வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர்.

பல வீடுகளில் கள்ளச்சாரயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான ரூசி ராவத் (23) மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரை போலீசார் தான் தள்ளி விட்டு கொன்றதாக கிராமத்தினர் கூறுகின்றனர். அந்த பெண் தனது வயிற்றில் சாராயம் வைத்திருப்பதாக எண்ணி போலீஸ் தள்ளி விட்டதாக தெரிவித்தனர்.

ராம்சான்சி காத் பகுதி ஏ.எஸ்.பி

ரூசி ராவத் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் மீதான தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com