பூரணாங்குப்பத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

பூரணாங்குப்பத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமனது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூரணாங்குப்பத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
Published on

அரியாங்குப்பம்:

புதுவை பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகள் தமிழரசி (வயது24). இவர் நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிசென்ற தமிழரசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் தமிழரசி இல்லை.

இதையடுத்து வள்ளி தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூரணாங்குப்பத்தில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த தமிழக வாலிபர் ஒருவருடன் தமிழரசி பழகி வந்தது தெரியவந்தது. இதனால் தமிழரசியை அந்த வாலிபர் கடத்தி சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com