திருவண்ணாமலை கோர்ட்டில் வி‌ஷம் குடித்த இரவு காவலர் கைது

திருவண்ணாமலை கோர்ட்டில் இரவு பணியில் இருந்த காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கோர்ட்டில் வி‌ஷம் குடித்த இரவு காவலர் கைது
Published on

திருவண்ணாமலை:

கலசபாக்கம் அருகே பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 29). இவர் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவு காவலராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

திருமணமாகி சில மாதங்கள் தான் ஆவதால் தன்னை மீண்டும் திருவண்ணாமலை கோர்ட்டுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி திருவண்ணாமலை கோர்ட்டுக்கு வந்த கிருஷ்ணன், திடீரென பூச்சிமருந்து (வி‌ஷம்) குடித்து கோர்ட்டு வளாகத்தில் மயங்கி விழுந்தார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com