சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி பாராளுமன்ற தேர்தல் ஜூலை 10-ல் நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு எண்ணிக்கை பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதற்கிடையே, சிங்கப்பூர் தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் வெற்றிக்குப் பாராட்டுகள். சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com