வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரண்டாம் நிலையில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

கொதிகலனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com