புத்தாண்டு கொண்டாட்டம்: அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

புத்தாண்டுப் பிறப்பின் போது நள்ளிரவில் அதிவேகமாக ஓட்டி பொது மக்களை அச்சுறுத்தினாலோ, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம்: அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

புத்தாண்டு தினத்தையொட்டி 31-ந் தேதி இரவு முதல் உள் அரங்கிற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதி டி.எஸ்.பி.யிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில், கலாசாரத்தை சீரழிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. பெண்களை கிண்டல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டுப் பிறப்பின் போது நள்ளிரவில் அதிக சப்தத்துடன் வாகனங்களை இயக்குதல், அதிவேகமாக ஓட்டி பொது மக்களை அச்சுறுத்தினாலோ, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.

அதிக ஒலியுடன் இசைக் கருவிகள், ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விபத்துகளை தடுக்க 31-ந் தேதி இரவு முதல் அதிகாலை வரை மாவட் டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com