மெட்ரோ ரெயிலில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்... நெட்டிசன்கள் விமர்சனம்

மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
metro rail dance
Published on

சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளது.

அவ்வகையில் மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் சஹேலி ருத்ரா என்ற பெண் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் தமன்னா நடனமாடிய 'ஆஜ் கி ராத்' என்ற இந்தி பாடலுக்கு முகம் சிலுக்கும் படியான நடன அசைவுகளை பயன்படுத்தி அப்பெண் நடனமாடுகிறார். சிலர் அப்பெண்ணை பாராட்டினாலும் பொது இடங்களில் இப்படி நடனமாடுவது சரியில்லை என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com