திருப்பதி கோவிலில் செப்டம்பர் வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி பவித்ரோத்சவ அங்குரார்ப்பணமும், 24-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும் நடக்கிறது.
Tirupati Temple
Published on

திருப்பதி கோவிலில் வருகிற 14-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் வரை முக்கிய விழாக்கள் நடைபெறுவது குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும். 17-ந்தேதி ஆனிவார ஆஸ்தானமும், 19-ந்தேதி ஆண்டவன் ஆசிரம சுவாமிகளுக்கு பெரிய மரியாதை நிகழ்வும் நடக்கிறது. 29-ந்தேதி திருமலை ஜீயர் சுவாமிகளின் சதுர்மாச்ய சங்கல்பம் நடக்கிறது. ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி பவித்ரோத்சவ அங்குரார்ப்பணமும், 24-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும் நடக்கிறது.

ஸ்ரீவாரி பிரம்மோற்சவம்

செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 14-ந்தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவ அங்குரார்ப்பணமும், 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஸ்ரீவாரி பிரம்மோற்சவமும் நடக்கிறது.

வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

மேற்கண்ட நாட்களுக்கு முந்தைய நாளில், முக்கிய பிரமுகர்களைத் தவிர, வி.ஐ.பி. பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com