"எல்லா நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள்.." இந்தியா வந்துள்ள மார்கோ ரூபியோ கருத்து

பிரதமர் மோடியை சந்தித்த அவர் அமெரிக்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
"எல்லா நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள்.." இந்தியா வந்துள்ள மார்கோ ரூபியோ கருத்து
Published on

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் அமெரிக்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இரு நாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு எதிராக இணையதளம் உள்ளிட்டவை வாயிலாக இனவெறி கருத்து பரப்பப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, "எல்லா நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.

அமெரிக்கா என்றும் குடியேறிகளை வரவேற்கும் நாடு என்றும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் குறித்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் உலகம் முழுவதும் தனிநபர்களால் இவ்வாறான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் இந்தோ-பசிபிக் ஒப்பந்தம் குறித்து விரைவில் வியக்க வைக்கும் அறிவிப்புகள் வரவிருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக அதிக வரிவித்தப்பை சுட்டிக்காட்டி இந்தியாவை நரகக்குழி என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com