டெல்லியில் முதலமைச்சர் விஜய்...

நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
முதலமைச்சர் விஜய்
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 4.30 பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதன்பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்கிறார்.

அதனை தொடர்ந்து நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com