‘பெட்ரோல், டீசல்மீதான அடுத்தக்கட்ட விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும்’ - பாரத் பெட்ரோலியம்

பெட்ரோல், டீசல் நிலையங்களில் விலையை நேரடியாக உயர்த்துவது. அதாவது நுகர்வோர் மீது சுமையை ஏற்றுவது.
‘பெட்ரோல், டீசல்மீதான அடுத்தக்கட்ட விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும்’ - பாரத் பெட்ரோலியம்
Published on

தற்போதைய உலகளாவிய எரிசக்தி தடங்கல்கள் தொடர்ந்தால், சில்லறை எரிபொருள் விலையில் மேலும் ஒரு உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மனிதவள இயக்குநர் ராஜ் குமார் துபே கூறியுள்ளார்.

‘உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இப்படியே தொடர்ந்தால் பெட்ரோல், டீசல்மீதான அடுத்தக்கட்ட விலை உயர்வு தவிர்க்க முடியாதது’ என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் ராஜ் குமார் துபே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர்,

“இப்போது நம்மிடம் மூன்றுவழிகள்தான் உள்ளன. பெட்ரோல், டீசல் நிலையங்களில் விலையை நேரடியாக உயர்த்துவது. அதாவது நுகர்வோர் மீது சுமையை ஏற்றுவது.

அல்லது பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த நஷ்டங்களை ஏற்றுக்கொண்டு, மேலும் நஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். மூன்றாவது, பற்றாக்குறை நிதியுதவி மூலம் அரசாங்கம் நிதி வழங்குவது.

தற்போதைய சூழலில், இதே நிலை நீடித்தால், விலை உயர்வு என்பது நிச்சயம் நடக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் பெட்ரோல், டீசல் இருப்பு தாராளமாக உள்ளதாகவும், சமூக ஊடகங்களில் பரவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிக்கத் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com