ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை 2வது முறையாக உயர்த்திய ஷெல் நிறுவனம்!

பெட்ரோல், டீசல் விலையை ஷெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை 2வது முறையாக உயர்த்திய ஷெல் நிறுவனம்!
Published on

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான ஷெல் இந்தியா (Shell India), பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பெங்களூருவில் ஷெல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.41 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பெட்ரோல் விலை ரூ.119.85 ஆகவும், அதன் பிரீமியம் ரகமான “பவர்” பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.129.85 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.25.01 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சாதாரண வகை டீசலின் விலை ரூ.123.52 ஆகவும், பிரீமியம் வகை டீசலின் விலை ரூ.133.52 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் நயாரா எனர்ஜி நிறுவனம் விலையை உயர்த்திய நிலையில், ஷெல் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $100-க்கும் அதிகமாக இருப்பதாலும், ஈரான் போர் சூழல் காரணமாகவும் நஷ்டத்தை குறைக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷெல் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு, சில பங்க்-களில் குறைந்த அளவிலான விலை உயர்வை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com