மின்னணு வாக்கு இயந்திரத்தை குறை சொல்லாதீர்கள்: காங்கிரசை சாடிய உமர் அப்துல்லா

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை நிலையில் இருக்கிறது. அடிக்கடி கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தவேண்டும் என்றார்.
மின்னணு வாக்கு இயந்திரத்தை குறை சொல்லாதீர்கள்: காங்கிரசை சாடிய உமர் அப்துல்லா
Published on

புதுடெல்லி:

காஷ்மீர் முதல் மந்திரியான உமர் அப்துல்லா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் (காங்கிரஸ்) 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பெறும்போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறீர்கள்.

அதே தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறீர்கள்.

இத்தகைய அணுகுமுறையை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்காதவர்கள் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை நிலையில் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். அடிக்கடி கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தவேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com