

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கேரளம் மாநில முதல் மந்திரியாக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வி.டி.சதீசன் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், வி.டி.சதீசன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டசபைத் தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.