Sweep: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

84 நகராட்சிகளில் உள்ள 2,030 இடங்களில் பாஜக 1,791 இடங்களையும், காங்கிரஸ் 414 இடங்களையும் கைப்பற்றின.
Sweep: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
Published on

நடந்து முடிந்த குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத் மாநகராட்சியில் உள்ள மொத்த 192 இடங்களில், பாஜக 158 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சூரத் நகரில் 120 இடங்களில் பாஜக 115 இடங்களை வென்றது. ஆம் ஆத்மி 4 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் மட்டுமே வென்றன.

போர்பந்தர் மற்றும் மோர்பி நகரங்களில் பாஜக மொத்தம் உள்ள உள்ள 52 இடங்களையும் பாஜக முழுமையாகக் கைப்பற்றியது.

அதேபோல 84 நகராட்சிகளில் உள்ள 2,030 இடங்களில் பாஜக 1,791 இடங்களையும், காங்கிரஸ் 414 இடங்களையும் கைப்பற்றின.

34 மாவட்டப் பஞ்சாயத்துகளில் உள்ள 1,090 இடங்களில் பாஜக 568 இடங்களை வென்றது. காங்கிரஸ் 77 இடங்களை மட்டுமே பெற்றது.

260 தாலுகா பஞ்சாயத்துகளில் உள்ள 5,234 இடங்களில் பாஜக 2,397 இடங்களை வென்றது. இங்கு காங்கிரஸ் 591 இடங்களைப் பெற்றது.

இந்த வெற்றி மூலம் பாஜக குஜராத்தில் தன்னை தொடர்ந்து வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

"குஜராத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான உறவு தற்போது மேலும் நெருக்கமாகவும் வலிமையாகவும் மாறியுள்ளது!

மாநிலம் முழுவதும் நடைபெற்ற நகராட்சி, தாலுகா பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களில், பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்திருக்கும் அமோகமான மக்கள் ஆதரவுக்கும் மக்கள் ஆணைக்கும், குஜராத் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில அரசின் மக்கள் நலன் சார்ந்த மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில், குஜராத் மக்கள் மீண்டும் ஒருமுறை நல்லாட்சி அரசியலின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வந்த அயராத முயற்சிகளை, மக்கள் மனதார ஆசீர்வதித்துள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துகின்றன.

வரும் காலங்களில், நாங்கள் இன்னும் அதிக அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றுவோம் என்றும், மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் குஜராத் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com