ரூ.150 கோடி குடும்ப சொத்து தகராறு.. குடிபோதையில் தந்தையை சுட்டுக்கொன்ற மகன்

ஹரியாமிற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே சொந்தமாக நிலமும், சந்தையில் சொந்தமாக மூன்று கடைகளும் உள்ளன.
Son shoots father dead over 150 crore property dispute in Uttar Pradesh
Published on

உத்தர பிரதேசத்தில் 150 கோடி ரூபாய் குடும்ப சொத்து பிரச்சனையில் தனது தந்தையை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

காசியாபாத்தில் உள்ள மோடிநகர் அடுத்த புதானா கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஹரியாம் என்பவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், நிகில், நிஷூ என இரண்டு மகன்களும் உள்ளனர்.

ஹரியாமிற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே சொந்தமாக நிலமும், சந்தையில் சொந்தமாக மூன்று கடைகளும் உள்ளன. இதன் மதிப்பு ரூ.150 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாம் இந்த சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து, தனது மகன்களுக்கு இரண்டு பங்கும், தனது மனைவிக்கு ஒரு பங்குமாக மொத்தம் மூன்று பங்காக பிரித்துள்ளார்.

இந்த சொத்துக்களை விரைவாக பத்திரம் முடித்து தனது திருமணத்திற்கு முன்பாக தருமாறு தந்தையிடம் நிகில் கூறியுள்ளார்.

இதையடுத்து சொத்துக்களை விரைவாக பிரித்து கொடுப்பதற்கு ஹரியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று குடித்துவிட்டு இரவு 11 மணியளவில் மதுபோதையில் நிகில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது தந்தையை மூன்று முறை சுட்டதில், ஹரியாம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளி நிகிலை பிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103-இன் கீழ் முதல் தகவல் அறிக்கையை மோடிநகர் காவல்துறையினர் பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com