ADMK-BJP | டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அ.தி.மு.க-பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா
Published on

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது, பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க-பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இரு கட்சிகளும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திப்பதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசினர்.

நாளை நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com