ஆந்திராவில் கொரோனா பாதிப்பு - மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Covid-19
Published on

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

கொரோனா தொற்று

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் எச்சரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் தயார்நிலை, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவசர உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மாநில கண்காணிப்பு அதிகாரி மூலம் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாவட்டங்களின் மருத்துவ சுகாதார அலுவலர்கள், அரசு பொது மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மத்திய அரசு வழிகாட்டுதல்கள்

காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

கொரோனா நெறிமுறைகள்

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த தகவல் தள இணையதளத்தில் தாமதமின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும்.

பி.சி.ஆர் பரிசோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அவசரகால போக்குவரத்து அமைப்புகள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகளின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதலுக்காக நியமிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

கொரோனா நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com