பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்

சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பரேக் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்தனர்.
BJP
Published on

சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.

இதில் மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்.எல்.ஏ.க்கள் மேற்குவங்க சட்டசபையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் ரிதப்ரதா பானர்ஜி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.

மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினர். அவர்கள் திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர்.

இவர்களைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரகாஷ் சிக் பரேக் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ந்து எம்.பி.க்கள் விலகியது மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மாநிலங்களவை முன்னாள் எம்.பி.க்கள் கொல்கத்தாவில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

அவர்களுக்கு மாநில தலைவர் பா.ஜ.க. துண்டு அணிந்து உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com