நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.45 ஆக‌ உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.45 ஆக‌ உயர்ந்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வருகின்றன்.
நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களில் விலை தொடர்ந்து முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 420 காசுகளாக ஆக இருந்த முட்டை விலை மேலும் 25 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தராஜன் கூறியதாவது:-

முட்டை தட்டுபாடு, வட மாநிலங்களில் விழாக்கள் முடிவடைந்ததால் முட்டை 5 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. கொரோனோ பாதிப்பால் கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தீவனம் குறைப்பு, குஞ்சு விடுவது நிறுத்தியதால் உற்பத்தி குறைந்தது. இதனால் முட்டை தட்டுபாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது.

இப்போது மழைகாலம் என்பதால் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால் முட்டை விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் தமிழகத்தில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் அரசு பள்ளிகளுக்கு இந்த மாதம் 4.50 கோடி முட்டை தேவைப்படுகிறது. இதனால் தேவை அதிகரித்துள்ளது. கோழிப் பண்ணையாளர்களுக்கு முட்டைக்கு 425 கிடைப்பதால் நஷ்டத்தில் இருந்து மீண்டு வருகின்றன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com