பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தங்கள் மாநிலங்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பட்ஜெட் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பிரச்சனைகளை எழுப்புகின்றனர்.

இன்று பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக, பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காந்தி சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.


இதேபோல் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் பிற கோரிக்கைகளை முன்வைத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தனியாக போராட்டங்கள் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com