சந்தேகம் வந்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும் - கோவை எஸ்.பி.

குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகம் வந்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். #gutkha
சந்தேகம் வந்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும் - கோவை எஸ்.பி.
Published on

கோவை:

கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த தொழற்சாலையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஆலைக்கு சீல் வைத்தனர். 

அந்த தொழிற்சாலை சுமார் 5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அங்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பு இருப்பதாகவும், எனவே அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் சந்தேகம் வந்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி கூறியுள்ளார். #tamilnews #gutkha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com